ரிஷப் பந்த் தனது திறனை முழுமையாக உணரவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தெரிவித்தார். "ரிஷப் பந்த் எந்த மாதிரியான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவருக்கு முறைப்படி தெளிவுப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலிய தொடரில் அவர், அதிக அளவிலான ரன்கள் சேர்க்கவில்லை. ஆனால் ரன்கள் எடுக்காத ஒருவரைப் போல அவர் விளையாடவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் 100 ரன்களை ரிஷப்பால் எடுக்க முடியும்” என்றார்.