அமெரிக்க எம்பி பிராட் ஷெர்மன் தனது X தளத்தில், “பயங்கரவாதி பின்லேடனைப் பற்றி தகவல் வழங்கிய டாக்டர் ஷாகில் அப்ரிடிக்கு பாகிஸ்தான் அரசு சிறை தண்டனை வழங்கியது தவறு. அவரை விடுவிக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார். அதற்கு இன்று (ஜூன் 8) பதிலளித்த எம்பி சசி தரூர், "பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ஆதரித்தால் வெகுமதி கிடைக்கும். அவர்களை காட்டிக் கொடுத்தால் தண்டனை கிடைக்கும்" என விமர்சித்துள்ளார்.