தெலுங்கு சினிமா துறையினருக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று பேசிய அவர், அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா, கண்களை இழந்தாரா, அல்லது கிட்னியை தான் இழந்தாரா? அவரது இல்லத்துக்கு பிரபலங்கள் விரைந்து சென்றுபார்க்க வேண்டிய அவசியம் என்ன? தியேட்டர் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சினிமா பிரபலங்கள் யாராவது அக்கறை காட்டினீர்களா? இனி தெலங்கானாவில் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி தரப்படாது; டிக்கெட் கட்டண உயர்வுகளும் இருக்காது என அதிரடியாக பேசியுள்ளார்.