கால்பந்து வீரர் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அறிவித்து அர்ஜென்டினா கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது. அர்ஜென்டினா அணியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது நாங்கள் அவருக்கு அளிக்கும் சிறிய மரியாதை என அர்ஜென்டினா கால்பந்து வாரியம் தெரிவித்துள்ளது. இதே போல சமீபத்தில் இந்திய
கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.