டாஸ்மாக் ரூ.1000 கோடி முறைகேடு, கனிமவளக் கொள்ளை வழக்குகளை விசாரித்து வந்த 2 ED அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மண்டல ED இணை இயக்குநர் பியூஷ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கையும் இருவரும் விசாரித்தனர். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று வந்த நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. முதல்வரின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சிகள் சாடியிருந்தது.