ODI போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து விராட் கோலி மனம் திறந்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விராட் கோலி, “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை. தற்போது எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் உள்ளவரையில் தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறியுள்ளார்.