இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கடந்த 2000 - 2004 வரையிலான ஒடிசா பாஜக + பிஜு ஜனதா ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அதனைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும், முதல் ஆளுநருமாக பொறுப்பு வகித்தார். தொடர்ந்து 8வது முறையும் ஜார்கண்ட் ஆளுநராக பணியாற்றினார். 2022ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசு தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவர், இன்று குடியரசு தலைவராக இருக்கிறார். இவர் இந்திய குடியரசுத்தலைவர்களில் முதல் பழங்குடியின பெண் ஆவார்.