தங்க நகைக் கடன்.. நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி

69பார்த்தது
தங்க நகைக் கடன்.. நிபந்தனைகளை தளர்த்திய ரிசர்வ் வங்கி
கூட்டுறவு வங்கிகளில் தங்க நகைக் கடனுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ளார். "இப்பிரச்சனை சம்பந்தமாக ஒன்றிய நிதியமைச்சரிடம் நேரில் சந்தித்து தந்த கடிதத்தின் பல அம்சங்கள் ஈடேறி உள்ளன என்பது மகிழ்ச்சி. ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை. தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவையில்லை. உள்ளிட்டவை இதில் அடக்கம்" என்றார்.

தொடர்புடைய செய்தி