அஸ்ஸாம்: கவுஹாத்தி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), பல்வேறு துறைகளில் Ph.D. படிப்புக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2025 ஜனவரி அமர்வு சேர்க்கைக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். உடற்கூறியல், உயிர்வேதியியல், சமூகம் மற்றும் குடும்ப மருத்துவம், நுண்ணுயிரியல், மருந்தியல் மற்றும் மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன. விவரங்கள் இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் இருக்கும். www.aiimsguwahati.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.