ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோயில் அருகே தனியார் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஈரோடு எஸ்.பி., ஜவகருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பவானி டி.எஸ்.பி தலைமையில் போலீசார் லாட்ஜில் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது லாட்ஜில் இருந்த பெண்களும், ஆண்களும் தப்பியோட முயன்றனர். அவர்களை சுற்றிவளைத்து போலீசார் பிடித்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்களும், 3 ஆண்களையும் போலீசார் பிடித்துச் சென்றனர்.