அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மீரட் முனிசிபல் கார்ப்பரேஷன் ஒரு அற்புதமான வேலையைச் செய்தது. மிஷனரி சதுக்கத்தில் உள்ள ஐ லவ் மீரட் செல்ஃபி பாயின்ட்டில் குப்பைகளால் செய்யப்பட்ட மகாத்மா காந்தியின் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிலையை பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று பலரும் தெரிவித்தனர். மேலும் இது காந்தியை அவமதித்ததாக பல விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இந்த சிலையை மாநகராட்சி அதிகாரிகள் சமீபத்தில் அகற்றினர்.