தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படும் நிலையில் அவரின் பொதுவாழ்வு சாதனைகளை நினைவுகூர்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சி, தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவர் விஜயகாந்த்" என புகழாரம் சூட்டியுள்ளார்.