உத்தரப் பிரதேசம்: பிரசாந்த் அரசு வேலையில் இருந்த போது உயிரிழந்தார். அந்த வேலை அவர் மனைவி ஜெயாவுக்கு கிடைத்தது. பிரசாந்த் சிகிச்சைக்காக ஏற்பட்ட கடனை அடைப்பதோடு அவர் தாய் மீனாவை கவனித்து கொள்வேன் என ஜெயா உறுதியளித்தார். ஆனால் வேலையில் நிலையாக உட்கார்ந்த பிறகு அவர் போக்கு மாறியது. மாமியாரை தவிக்கவிட்டு தனது தந்தை வயதுடைய அதிகாரியை ஜெயா மணந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பயனில்லை என மீனா புலம்பி வருகிறார்.