தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உள்பட 3 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். பாமக மா.செ. பிரபாகரன், நிர்வாகிகள் முருகன், வீரமணி உள்ளிட்டோரிடம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.