கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் ரிலீஸ் அப்டேட்

53பார்த்தது
கவின் நடித்துள்ள 'மாஸ்க்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
நடிகர் கவின் அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மாஸ்க்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வருகிற மே மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி