கல்வியையும் - வாசிப்பையும் - பதிப்புப் பணியையும் ஊக்குவிக்கும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த பதிவு புத்தக தபால் (Registered Book Post) சேவையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என திமுக எம்.பி பி.வில்சன் தனது X தளம் வாயிலாக பிரதமர் மோடி மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளார். பல நூறு கோடி செலவில் சிலைகளுக்கு கணிசமான நிதி ஒதுக்க முடியும் என்றால், இதற்கு ஏன் ஒதுக்கக்கூடாது என கேள்வியெழுப்பியுள்ளார்.