மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மற்றொரு நாயகியும் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் ஆகிய படங்களில் நடித்த ரெஜினா கசாண்ட்ரா இப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.