மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அஜித் நடிப்பில் இதற்கு முன்னதாக வெளியான 'துணிவு' படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிட்டிருந்தது. பொங்கலுக்கு வெளியாக இருந்த விடாமுயற்சி சில பிரச்னைகள் காரணமாக பிப்ரவரி 06ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.