தமிழகத்தில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதனை மீட்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பிலிருந்து ரூ.5577.35 கோடி மதிப்பிலான 6140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, மீட்பு பணிகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.