கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தாக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். அவரது x பதிவில், எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்கவும் அரசு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.