பள்ளிகளில் செயல்படும் பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்க மாநிலக் கல்விக்கொள்கை குழுவினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "சில தனியார் பள்ளிகளில் நீட், ஜேஇஇ உட்பட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அல்லது பாடங்களை நடத்தாமலேயே மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு மட்டும் பயிற்சி அளிக்கின்றன" என்றனர்.