தெய்வங்கள் மற்றும் அவதார புருஷர்களின் அவதார தினத்தை ஜெயந்தி என கொண்டாடுவது வழக்கம். அப்படி அனுமன் அவதரித்த தினத்தை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் அவதரித்ததாக கூறி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் சித்திரை மாதம் பெளர்ணமியில் அனுமன் அவதரித்ததாக கருதி, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.