ரஜத் படிதார் தலைமையிலான RCB அணியின் வெற்றியை இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரும், இந்திய வம்சாவளியுமான ரிஷி சுனக் குழந்தைபோல துள்ளிக்குதித்து கொண்டாடினார். அவர் RCB அணியின் தீவிர ரசிகராக இருந்து வரும் நிலையில், அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியை பார்க்க தனது மனைவியுடன் நேரில் வந்திருந்தார். எலைட் பாக்சில் ICC சேர்மன் ஜெய் ஷா இருந்தார். அப்போது, குழந்தையைப்போல ரிஷி ஆர்சிபி-யின் வெற்றியை கொண்டாடினார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.