ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 3) பெங்களூரு - பஞ்சாப் அணிகள் இடையே நடந்தது. இதில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. RCB அணி 18 வருடத்திற்கு பிறகு கோப்பையை வென்றுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் விராட் கோலி மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பிறகு கையில் கோப்பையை பிடித்த விராட் அதனை முத்தமிட்டு மகிழ்ந்தார். மேலும், அந்த கோப்பையை ரசிகர்கள் மத்தியில் காண்பித்து உற்சாகப்படுத்தினார்.