பெங்களூரில் ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்துவிட்டார்கள் என்ற செய்தி இதயத்தை உலுக்கியது என ஸ்மிருதி மந்தனா வேதனை தெரிவித்துள்ளார். ஆடவர் IPL 2025 போட்டியில் வெற்றிக்கோப்பையை ஆர்சிபி அணி கைப்பற்றியது. இதன் வெற்றிகொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பெண்கள் ஆர்சிபி அணியின் கேப்டன் & இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.