பெங்களூருவில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரம் RCB-க்கு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அணி நிர்வாகத்திற்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், ஏற்பாடுகளில் அலட்சியமாக இருந்தது கண்டறியப்பட்டால், BCCI கடும் நடவடிக்கை எடுக்கக்கூடும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக அடுத்த ஆண்டு RCB அணி IPL போட்டிகளில் இருந்து தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.