முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள RCB அணியின் வெற்றி பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்று (ஜூன்.04) மாலை 5 மணிக்கு பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என RCB அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், பெங்களூருவில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறை கைவிரித்ததால் அந்த அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.