ஐபிஎல் தொடரில் நேற்று (ஜூன் 3) PBKS-க்கு எதிரான இறுதிப் போட்டியில் RCB அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இந்நிலையில், RCB அணி வீரர்களின் 'வெற்றி பேரணி' பெங்களூருவில் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு விதான சவுதாவில் தொடங்கும் பேரணி சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.