வங்கிகளில் அனைத்து விதமான கணக்குகளுக்கும் நாமினி (Nominee) கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் தேவையற்ற சிரமங்களை தவிர்க்க தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நிலையான வைப்பு கணக்குகள், சேமிப்புக் கணக்குகள் மற்றும் பாதுகாப்பு லாக்கர்கள் இருந்தால் நாமினி தொடர்பாக வங்கிகள் பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.