ரசிகர்களால் 'நேஷனல் க்ரஷ்' என அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து 'அனிமல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'அர்ஜூன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்க இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விமானம் ஓட்டும்போது ரன்பீரும், ராஷ்மிகாவும் லிப்லாக் முத்தம் கொடுப்பது போல் உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.