தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷீத் கான்!

672பார்த்தது
தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷீத் கான்!
மேற்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹெராத் மாவட்டத்தின் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. நிலநடுக்கத்தால் 2 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அரசுப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக அந்நாட்டு வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார். அதன்படி, “ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வருந்துகிறேன். நிதி திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளேன்” என ரஷீத் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி