திண்டுக்கல்: நத்தம் அருகே கடந்த 2021ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆண்டிஅம்பலம் (40), அவரது மனைவி சீரின்ஜெனத் (40) ஆகிய 2 பேரையும் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஆண்டிஅம்பலத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.1,10,000 அபராதமும், அவரது மனைவி சீரின்ஜனத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.60,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.