40 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைதான 23 வயது சமூக வலைத்தள பிரபலத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், “ஒருகை தட்டினால் ஓசை எழாது, பாதிக்கப்பட்ட பெண், குழந்தை கிடையாது” என கருத்து தெரிவித்தது. கைதானவர் 9 மாதங்களாக சிறையிலிருந்தும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. இருவரும் ஒன்றாக ஜம்மு சென்ற நிலையில், எதற்காக பலாத்கார வழக்கு தொடரப்பட்டது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.