செம்பிலான்குடி கண்மாய்க்கு போக்கு கால்வாய் (சருக்கை) இல்லாதததால் தொடர்ந்து பல வருடங்களா பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயகிகள்
ராமநாதபுரம் மாவட்டம். ஆர். எஸ். மங்கலம் தாலுகா, குலநாத்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200 ஏக்கருக்கு மேல் விவசாயம் உள்ளது. இந்த விவசாயத்தை நம்பியே இக்கிராம விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராம விவசாயிகளின் நிலங்கள் பெரும்பாலும் செம்பிலான்குடி கண்மாய் உட்பகுதியில் உள்ளது. தற்போது பெய்த மழையின் காரணமாக திருவாடானை பகுதிகளில் இருந்து வரும் உபரி நீர் இந்த கண்மாய்க்கு மட்டுமல்லாது. அந்த பகுதியில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மணக்குடி வழியாக கடலில் சேருகிறது.
அப்படி செம்பிலான்குடி கண்மாய்க்கு வரும் தண்ணீர் நிரம்பி வரும் நிலையில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர புகுந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இந்த செம்பிலான்குடி கண்மாய்க்கு சருக்கை என்று சொல்லப்படும் உபரிநீர் வெளியேற வழி வகையில்லை. இதனால் வருடா வருடம் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதனால் பல லட்சம் வீணாவதோடு வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
எனவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வாழ்வாதாரமான விவசாயத்தை காக்கும் வகையில் செம்பிலான்குடி கண்மாய்க்கு நிரந்தரமாக உபரிநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்