திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழா ஒன்றாம் நாள் வீதி உலா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் வரலாற்றுச் சிறப்புடன் கம்பீரமாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 1ம் நாள் வீதி உலாவில் விநாயகர், முருகன் பெருமான், சண்டீகேஸ்வரர் கேடக வாகனத்திலும், ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் இந்திர விமான வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி மேல தாளம் முழுங்க வானவேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இருபத்தி இரண்டரை நாட்டார்கள் சுவாமி வாகனங்களை இழுத்து வந்து கோவிலை அடைந்தனர்