திருவாடானை அருகே துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தினர்.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் புதிய துணை சுகாதார நிலையம்கட்டடம் கட்ட ரூ. 35 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகள் சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இங்குள்ள துணை சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்ததால் அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் தரமாக நடக்கிறதா என அதிகாரிகள் அடிக்கடி பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.
பல இடங்களில் புதிய கட்டடங்கள் சில ஆண்டுகளில் சேதமடைந்து விடுகிறது. ஆகவே அதிகாரிகள் பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.