திருவாடானை பெரிய கோவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பால்குட உற்சவ விழா விமர்சையாக நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
கடந்த 10 நாட்களாக விழா நடைபெற்று வந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஏதுவாக பால்குட உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து வீதி உலா வந்தனர். இந்த வீதி உலாவின் ஏற்பாடுகளை உபயதாரர்கள், திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் செய்திருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பக்தர்கள் அருள் பெற்றுச் சென்றனர். திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுச் சென்றனர்