ராமநாதபுரம் அருகே தியாகவன்சேரி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் 19-ஆம் ஆண்டு முளைப்பாரி விழா செப். 26 ஆம் தேதி மாலை காப்பு கட்டுடன் தொடங்கியது.
இதையொட்டி ஆடவர் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் தினமும் இரவு நடந்தது. அம்மன் கரகம் நேற்றிரவு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தடைந்தது. இன்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்காக வீதி உலா சென்றது. இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி மழை வேண்டியும் நாட்டு மக்கள் நலம் பெற வேண்டியும் அம்மனை வழிபட்டனர்.
மாலை 4 மணியளவில் வாலிபர்களின் ஒயிலாட்டத்திற்கு பின் கிராம முக்கியஸ்தர்கள், விழா குழுவினர், நன்கொடையாளர்கள் கோயில் நிர்வாகம், விழாக்குழு சார்பில் கவுரவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆலயத்தில் இருந்து 5 கிமீ. , தொலைவில் உள்ள நீர் நிலையில் கரைக்க அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர். தியாகவன்சேரி கிராம மக்கள், முத்துமாரியம்மன் ஆலய வஸ்தாவிகள் மாப்பிள்ளைசாமி, சாத்தையா மற்றும் ரவி, தர்மலிங்கம் உள்ளிட்ட விழாக்குழுவினர், விழா ஏற்பாடுகளை செய்தனர்.