திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் வரலாற்றுச் சிறப்புடன் கம்பீரமாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அனுஞ்சை, வாஸ்து சாந்தி, பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இன்று மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுள்களின் திருவீதி விழா நடைபெறும் வருகிற ஜூன் 8ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெறும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்