திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக திருவிழா 6ம் நாள் வீதி உலாவில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப, மயில், காமதேனு, மூஞ்சூரு, கேடக வாகனத்தில் வீதி உலா
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் வரலாற்றுச் சிறப்புடன் கம்பீரமாக ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழா மே 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்ற வருகிறது. வீதி உலாவில் விநாயகர் வெள்ளி மூஞ்சூறு வாகனத்திலும், அதனை தொடர்ந்ந்து முருகபெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சினேகவல்லி அம்பாள் வெள்ளி காளை வாகனத்திலும்,
சண்டீகேஸ்வரர் வெள்ளி கேடக வாகனத்திலும், சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி மேல தாளம் முழங்க வானவேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இருபத்தி இரண்டரை நாட்டார்கள் சுவாமி வாகனங்களை இழுத்து வந்து கோவிலை அடைந்தனர். திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் உபயதாரர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்