அரசு உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. அந்த வகையில் சின்ன கீரமங்கலத்தில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் சிறப்பு வகுப்பிற்காக வந்துவிட்டு செல்வதற்கு பேருந்து கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்தனர். தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் சிறப்பு வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மாவட்ட அதிகாரியான மாவட்ட முதன்மை அதிகாரிக்கு 9788858859 க்கு பலமுறை தொடர்பு கொண்ட போது அவர் போன் இணைப்பை எடுக்கவே இல்லை.
மாவட்ட அதிகாரி இதுபோல் இணைப்பை எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்