கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி.!

460பார்த்தது
தொண்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பட பத்ரகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று திருவிழாவின் இறுதி நாளாக பாய்மர படகு போட்டி நடைபெற்றது.


இந்த போட்டியில் பாசிப்பட்டினம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுப்பட்டினம் மணக்குடி முள்ளிமுனை, காரங்காடு, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலும் தலா படகு ஒன்றுக்கு ஆறு வீரர்கள் என சுமார் 132 வீரர்கள் கலந்து கொண்டு ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்தனர்.


இந்த கழுகு பார்வை காட்சிகள் பிரத்யேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுழற் கோப்பையும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

போட்டியை சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். பாதுகாப்பு பணியில் 40க்கும் மேற்பட்ட மரைன் போலீசார் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி