ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மத்திய மீன்வளம் பால்வளம் மற்றும் கால்நடை அமைச்சக அமைச்சர் புருச்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளம் பால்வளம் மற்றும் கால்நடை தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சக இணை அமைச்சர் எல். முருகன் சாகர் பரிக்ரமா நிலை 9 பயணத்தை தொடங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல். முருகன் 'சாகர் பரிக்ரமா யாத்திரை கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு குஜராத்தில் தொடங்கி குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் கன்னியாகுமரி வழியாக ராமேஸ்வரம் வரை நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் அடுத்த கட்ட சாகர் பரிக்கரமா யாத்திரை இன்று தொண்டியில் தொடங்கி சென்னையில் முடிவு பெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக தொண்டி அழகப்பா கடலியல் துறை கல்லூரி வளாகத்தில் யாத்திரை தொடங்கி அங்குள்ள மீனவர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்டறிந்தனர்.
இந்த கடல் யாத்திரை மூலம் மீனவ மக்களை நேரடியாக சந்தித்து பாரத
பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்ட உதவிகளில் பயன்பெறும் பயனாளிகளை நேரடியாக சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அதனுடைய பயன்கள் குறித்தும் கேட்டறிவது உள்ளிட்டவைகள் இந்த யாத்திரையின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை தொடரும் என்றார்.