தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். அதிகபட்சம் 20 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும். வட்டி ஆண்டுக்கு 6 சதவீதமாக இருக்கும். BC, MBC, சீர்மரபினரே இந்த கடனைப் பெற முடியும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கடனை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள், www.tabcedco.tn.gov.in என்ற இணையதளம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.