ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் அருகே உள்ள எஸ். எம் எஸ். முருக்கு கம்பெனியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை சார்பு ஆய்வாளர் சிவஞானபாண்டியன் தலைமையில் இன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 400 லிட்டர் ரேஷன் பாமாயில் எண்ணெய் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆர். எஸ். மங்கலம் கூடலூர் அருகே மதன்குடியைச் சேர்ந்த முருக்கு
மாஸ்டர் மகேஸ்வரன் என்பவரை கைது செய்தனர். முருக்கு கம்பெனி உரிமையாளர் பாலமுருகனை தேடி வருகின்றனர். இச்சோதனையில் தலைமை காவலர்கள் குமாரசாமி, முத்துகிருஷ்ணன், தெய்வேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.