நீதிபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

77பார்த்தது
திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி மனிஷ்குமார் தலைமையில், வழக்கறிஞர் சங்க தலைவர் ரமேஷ் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக மாவட்ட அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் திருவாடானை அரசு வழக்கறிஞர் கணேஷ்பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் முன்னதாக நீதிமன்ற ஊழியர்கள் பொங்கல் பானை வைத்து பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் தேங்காய் உடைத்து பொங்கல் படையல் இட்டும் கரும்புகள் வைத்தும் வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்க செயலாளர் சசிகுமார், வழக்கறிஞர் சங்க பொருளார் வேலாயுதம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் , காவல்துறையினர் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பல கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி