திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு சாலையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் கணேசன் தலைமையில் நேற்று (டிசம்பர் 28) நடந்தது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திரு உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.