திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்.!

52பார்த்தது
திருவாடானை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று ஊராட்சி மன்ற பெருந்தலைவர் தலைமையில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட கூட்ட அரங்கில் இன்று ஒன்றிய பெருந்தலைவர் முகமது முத்தார் தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வழக்கம்போல் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் சரி செய்யப்படாமல் உள்ளது அதை சரி செய்ய வேண்டுமென கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் சிறு கம்பையூரில் வயல்காட்டு பகுதியில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. அதை சரி செய்ய பல முறை கூட்டத்தில் கூறியும் இதுவரை சரி செய்யப்படவில்லை என்று கவலை தெரிவித்தனர் மின்வாரியத் துறை சார்பில் விரைவில் சரி செய்யப்படும்  என தெரிவித்தனர்.
கூடத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி