தொண்டி மணிமுத்தாறு ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் ஆய்வு.!

82பார்த்தது
தொண்டி மணிமுத்தாறு ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் ஆய்வு.!
தொண்டி மணிமுத்தாறில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

மழைக் காலங்களில் திருவாடானை உள்ளிட்ட சுற்றுவட்டார கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரிநீா் இந்த ஆற்றின் வழியாகத் தான் கடலுக்கு செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால் ஆறு முற்றிலும் சில இடங்களில் கழிவுநீா் கால்வாயாக மாறியது. இதனால், தண்ணீா் கடலுக்குள் செல்லாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. மழைக் காலங்களில் அனீஸ்நகா், எம். ஜி. ஆா். நகா் உள்ளிட்ட பகுதிகளை தண்ணீா் சூழ்ந்து விடுகிறது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள்ஆகியோரின் புகாரின் பேரில் நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீா் தேங்காமல் சீராக பாய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இந்த ஆய்வில் நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் முத்தமிழரசன், சுகுமாரன், கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி