பரமக்குடி நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தாக்குதலுக்கு உள்ளான வழக்கறிஞர் கண்ணனுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு, பாண்டிச்சேரி பெடரேஷன் கூட்டமைப்பின் துணைத் தலைவர் kVR கந்தசாமி தலைமையிலும், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேதுபாண்டியன் முன்னிலையிலும் மூத்த, இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கொடூரமாக தாக்கிய குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், தொடர்ந்து வழக்கறிஞர்கள் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டு வருவதால் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக மத்திய - மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.